
அன்னையின் வயிற்றில் பத்து மாதம்
பள்ளிப் பருவம் சில காலம்.
தந்தையின் பெயரோடு சில காலம்
பிள்ளைகளுடன் பல காலம்
முதுமையின் சில காலத்தோடு
வாழ்க்கையின் நாடகம் முடிவாகிவிடும்.
இதற்கிடையில் போடும் நாடகத்தில்...
வஞ்சகம் சூது பொறாமை ஏமாற்றுவது...
நம்பிக்கைத் துரோகம் ஏன் இந்தமானிடப் பிறப்பில்
மட்டும் இப்படி.
படம்: நீங்கள் கேட்டவை
பாடியவர்:ஜேசுதாஸ்
அபிமான பாடகர் இசையில் கலந்து தன்னை அர்ப்பணித்து,
அனுபவித்து பாடுபவர். சிறந்த சங்கீத மேதை.
அனுபவித்து பாடுபவர். சிறந்த சங்கீத மேதை.
பாடல்
---
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்
2 Kommentare:
எனக்கு மிகவும் பிடித்தமான பாடலை சிறப்பான விளக்கத்த்துடன் பதிப்பித்திருக்கீங்க..
nanri murali ungkal varavukku
Kommentar veröffentlichen