Montag, 9. April 2007

அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே


அன்பே..

என்னை சித்திரவதைப்...

படுத்துவது

உன் காதல் பாசம் நேசம் அல்ல

நீ.. வாழும் தூரம்.


பாடல்



அன்பே ஆருயிரே..ஆசைப்பூங்கொடியே

உன்னை பார்ப்பதற்கே.. உயிரே உருகுது என் மனமே.

ஜீவன் ஓயும் முன்னே..நான்..

வருவேன் உன்னிடமே..


நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல்

நேசம் அழியாது பொன்மானே..

உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே..

உருவம் குலைந்தே...தான் போனேனே.


அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..



என்காதலின் சின்னமே..ஏங்காதே..
என் அன்னமே..மண்ணில் நான் இங்கே.. மறைந்தாலும்

மயிலே உன் எண்ணம் மறையாதுகண்ணே..
என் தேகம் சாய்ந்தாலும்காற்றாய் உனைத்தேடி வருவேனே.


தீபம் இல்லாத..கோயில் போலே தினமும் தவித்தேன் நான் இங்கே
பூக்கள் இல்லாத சோலை போலே பொழுதே.. பூங்காற்றே நீ.. அங்கேஉனக்காகவே நானும் உயிர் வாழ்கின்றேன் இன்னுமே..
இனியும் சுமை தாங்க முடியாது எந்தன் உயிர் கூடும் தாங்காது..

உன்னை நான் வந்து பாராமல்

உருகும் என் மூச்சு போகாது.


அன்பே.. ஆருயிரே ஆசை பூங்கொடியே..


Keine Kommentare: