
உனக்கும் எனக்கும் நேரம் தேவையில்லை
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி.......
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூடமொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின் மொழி...
------
படம் மொழி
3 Kommentare:
To: thevathaiy@hotmail.de
>Subject: உங்கள் கவிதை வரிகள்.
>Date: Wed, 9 May 2007 20:12:53 +0200
>
>உங்கள் கவிதை வரிகள் எல்லாமே
>நன்றாக இருக்கின்றன
>வாழ்த்துக்கள் :)
>
>அன்புடன்
>-தமிழ்நிலா-
>( http://nninaivukal.blogspot.com )
>( http://ntamizhnila.blogspot.com)
nanrikal ungga vaalththai mail muulam anupiyathukku
உனக்கும் எனக்கும் மொழி தேவை இல்லை
உனக்கும் எனக்கும் நேரம் தேவையில்லை
உனக்கும் எனக்கும் தூரம்
கூட பரவாய் இல்லை
உன் இதய ஒளி ஒலியின் சத்தம்
மட்டும் நானாக வேண்டும்.
எனக்கு பிடிச்சது.
Kommentar veröffentlichen